Thursday, May 19, 2016

இளைய தலைமுறை

நமது இளைய தலைமுறையினரின் சமுதாய அறிவு, அக்கறை மற்றும் விழிப்புணர்வு பற்றி முந்தைய பதிவு ஒன்றில் எழுதியிருந்தேன். பார்க்கவும்:  http://sigmafashions.blogspot.in/2016/05/blog-post_17.html அதில் குறிப்பிட்ட வீடியோவை https://www.youtube.com/watch?v=yEXoD7YBYS0 என்ற சுட்டியில் காணலாம். அந்த பதிவில் என்னுடைய பார்வையை நிகழ்ச்சியாளரின் கேள்விகளுக்கு ஒரு பொறுப்புடன் பதிலளிக்கும் நாகரீகமோ, பொது அறிவோ அல்லது எளிய கேள்விகளுக்கே பதில் தெரியவில்லையே என்கின்ற வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாமல் அலட்சியமாகவும் கேலி, கிண்டலாகவும் பதிலளிக்கும் பொறுப்பற்ற இளைய தலைமுறையின் போக்கு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த வருத்தத்தின் அர்த்தம் இன்றைய தேர்தல் முடிவுகளில் வெளியாகி இருக்கிறது. மாற்றத்தை இன்றைய தலைமுறையினர் உதாசீனப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் ஒன்று வாக்களிக்கவில்லை அல்லது மாற்றத்திற்கான வழிமுறைகளைப் புரிந்து கொள்ளவில்லை என்பது நிதரிசனம்!! நம் பெரியவர்களிடமிருந்து அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. சமூக வலைதளங்களையும் பொழுதுபோக்குக்காகவேயன்றி சமூக அறிவுக்காக பயன்படுத்தவில்லை. இந்நிலை மாறவேண்டும். பெற்றோரும் பெரியவர்களும் சமுக அறிவுக்கும் விழிப்புணர்வுக்கும் நேராக இளையதலைமுறையினரை வழிநடத்தவேண்டும். வெறும் ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது!!!!!!

மாற்றம்-ஏமாற்றம்!!

என்னுடைய முந்தய பதிவுகளில் இந்தத் தேர்தலில் பா.மா.க. வுக்கு வாக்களிக்க வேண்டி காரணங்களுடன் எழுதியிருந்தேன். என்னுடைய நட்பு, உறவு வட்டங்கள் அனைவரும் போயும் போயும் ஒரு சாதீய வாதம் பேசும் கட்சிக்கா வாக்களிக்கச் சொல்லுகிறாய்? என்று கிண்டலடித்தார்கள். அதற்கு நான் பா.ம.க. ஒரு சாதி அமைப்பிலிருந்து உருவாகி இருந்தாலும் இப்போது அது ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான அரசியல் இயக்கம் என்று தன்னை முன்னிலைப்படுத்துகிறது. அதனுடைய முதல்வர் வேட்பாளரின் தகுதி திறமை களத்தில் இருக்கும் யாருக்கும் இல்லை. ஒரு வாய்ப்புக்கொடுத்துப் பார்ப்பதில் தவறில்லை என்று கூறி சமாளித்தேன். அன்புமணி தன்னை ஒரு தலைவராக முன்னிலைப்படுத்த அவர் தந்தை மூலம் கிடைத்த சாதீய வண்ணம் பூசப்பட்ட மேடையைப் பயன் படுத்தியதில் என்ன தவறு என வாதிட்டேன் இப்போது ரிசல்ட்டைப் பாருங்கள். அவருக்கு அவரது வட்டத்திற்கு வெளியே எந்த ஓட்டும் கிடைக்கவில்லை. எவ்வளவு அலைந்து மாற்றம் முன்னேற்றம் என்று கூவிக்கூவி அழைத்துப்பார்த்தாலும் நம் அறிவாளிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை. பழைய குட்டையிலேயே தாவி இருக்கிறார்கள். அவரை ஓரளவிற்குக் கூட ஊக்குவிக்கவில்லை. அவருடைய வட்டம் மட்டும் இல்லாதிருந்தால் அவரின் நிலைமை என்ன என்று யோசித்தீர்களா? வைகோ, விஜயகாந்த், சீமான் போல துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட வேண்டியதுதான். நல்ல வேளை! அவரது வட்டம் அவரைக்காப்பாற்றியது. இன்று 5.3 % வாக்கு வங்கியுடன் முன்றாவது இடத்திலாவது இருக்கிறார். அவரை சாதியவாதி என்று திராவிடக் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக விமரிசனம் செய்தன. ஆனால் அறிவு ஜீவிகள் கூட அதை நம்பி அவர் தனது வட்டத்திற்கு வெளியே ஒரு அரசியல் கட்சி சார்ந்தவராக அடையாளப்படுத்திக்கொண்டும் கூட அவருக்கு ஒரு வாய்ப்பளிக்கவில்லை. அவருக்கு வாய்ப்புக் கிடைத்தால் தானே அவரின் சாதீய வட்டத்திற்கு வெளியே செயல்பட்டு அவரின் திறமையை நிரூபிக்க அவரால் முடியும். அவர் சாதியவாதி என்றே வைத்துக்கொள்ளுங்கள். அவர் என்ன தான் செய்துவிடுவார்? மற்ற எல்லாச் சாதியினரையும் அழித்துவிடுவாரா? அது சாத்தியமா? அது என்ன பூச்சாண்டி? இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களிடையே ஒப்பீடு செய்தால் அவருக்கு என்ன குறை? அர்த்தமே இல்லாமல் ஒரு தகுதி வாய்ந்த நபரை உதாசீனம் செய்தார்கள். அவருடைய வட்டம் தான் அவரைக்காப்பாற்றியது. அவரது வட்டத்திற்கு வெளியே அவருக்கு ஆதரவு காட்டப்படாவிட்டால் அவர் எப்படி துணிந்து அவரது வட்டத்திற்கு வெளியே வருவார். இதை ஒருவரும் சிந்திப்பாரில்லை. அவரது சாதிச்சங்கப் பின்ணணியினை விமரிசனம் செய்தோர்கள் இப்போது எங்கே போனார்கள்?  எனவே அவருக்கு சாதிச்சாயம் பூசாமல் அடுத்த முறையாவது ஒரு வாய்ப்பளிக்கலாம் என்பது என்னுடைய பரிந்துரை. மற்றவர்களைப் போலவே அவரும் தவறு செய்தால் அடுத்த வாய்ப்பில் அவரைத்  தூக்கிவிட வேண்டியதுதான். பிறகு என்ன செய்வது? மறுபடியம் மாற்றம் தான். மாற்றம் ஒன்றே மாறாதது. ஏமாற்றங்கள் மாறும்!!!! 

தமிழ்நாடு தேர்தல் 2016 – முடிவுகள்




வரவேற்கத்தக்க அம்சங்கள்:
  1. தி.மு.க.வின் தோல்வி: தி.மு.க. வசம் ஆட்சி செல்வது நல்லதல்ல. அதிலிருந்து தப்பித்தோம். அதே சமயம் அ.தி.மு.கவுக்கு அடுத்து அது பலத்துடன் இருப்பதால் ஜெயலலிதா அதிகம் ஆட்டம் போடாமல் கட்டுக்குள் இருப்பார்.
  2. விஜயகாந்த், சீமான் போன்ற அரசியல் கோமாளிகளின் கூத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி.
  3. பாட்டாளி மக்கள் கட்சி, பா.ஜ.க. ஆகியவை தமது சாதீய, மதவாத சாயங்களினின்று விடுதலை அடைய வேண்டும் என்கின்ற படிப்பினை.
  4. வைகோவிற்கு ஒரு வலுவான குட்டு இனி யாரும் அவரை நம்பிச்செல்ல மாட்டார்கள் என நம்பலாம்.
  5. நல்ல வேளையாக தொங்கு சட்டமன்றம் அமையவில்லை. அமைந்திருந்தால் நம் அரசியல் வாதிகளின் அந்தர்பல்டிகளைக் கண்டு நாம் அசந்து போயிருப்போம்!

வருந்தத்தக்க அம்சங்கள்:

  1. நமது மக்களுக்கு இன்னும் புத்தி வரவில்லை. இத்தனை ஆண்டு காலம் செயல்படாதவர்களையும் ஊழல்வாதிகளையும் மட்டுமே தேர்ந்து எடுத்து ஆட்சி செய்ய வைத்து இருக்கிறோம். இப்போதாவது ஒரு மாற்று அரசியலுக்கு வழிவகுத்து இருக்கலாம். தி.மு.க. - அ.தி.மு.க தவிர்த்த யாரையாவது ஊக்குவித்து இருக்கலாம். இவர்கள் இருவரையும் தவிர்த்து யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டளித்து இருந்தாலும் இதே ரிசல்ட் தான் வந்து இருக்கும். ஆனாலும் தி.மு.க. - அ.தி.மு.க வாக்கு சதவீதம் குறைந்து அவர்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டு இருக்கும். இப்போது உள்ள நிலைமையில் நம்மை விட்டால் வேறு கதியில்லை என்கின்ற மிதப்பு இரு தரப்பினருக்குமே இருக்கும். இந்த நிலை தவிர்க்கப்பட்டு இருக்கலாம். நல்ல வாய்ப்பினை தவறவிட்டு விட்டோம்.
  2. மாற்று அரசியலுக்கு முயன்றவர்களை ஊக்குவிக்கத் தவறிவிட்டோம். ஒதுங்கி நிற்கும் நல்லவர்கள் இனி ஒருபோதும் உள்ளே வரத்தயங்குவதற்கு வழிவகுத்துவிட்டோம். இப்போது இருக்கும் மாற்று நபர்கள் சரியில்லை என்றாலும் கூட மக்களுக்கு மாற்று அரசியலில் ஆர்வம் இருக்கிறது என்கின்ற விஷயத்தை பதிவு செய்யத் தவறிவிட்டோம்.
  3. மாற்றத்திற்கான வாய்ப்புக்கு இன்னும் ஐந்து வருடங்கள் காத்து இருக்க வேண்டும்.
  4. ஜெயலலிதா இனி பிச்சை போடுவார். அதற்காக நமக்கு தெண்டம் போடுவார். எதைபற்றியும் கவலைப்படாமல் கொடநாட்டில் போய் படுத்துக்கொள்ளுவார். அனைவரும் அவருக்குப் பள்ளிஎழுச்சி பாடி தவம் இருக்க வேண்டும்!! நம் தலை எழுத்து!!! குடிமகன்களை மட்டுமே ஆதரிப்பார்!! சாராய வியாபாரம் அமோகமாக நடைபெறும்!!!

Tuesday, May 17, 2016

எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள்

எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள்


இந்த வீடியோ ஏற்கனவே சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுவிட்டது. நிகழ்ச்சியாளரின் கேள்விகளுக்கு ஒரு பொறுப்புடன் பதிலளிக்கும் நாகரீகமோ, பொது அறிவோ அல்லது எளிய கேள்விகளுக்கே பதில் தெரியவில்லையே என்கின்ற வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாமல் அலட்சியமாகவும் கேலி, கிண்டலாகவும் பதிலளிக்கும் பொறுப்பற்ற இளைய தலைமுறையின் போக்கு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான இவர்களே இப்படி ஆகிவிட்ட போது இனி இறைவன் தான் நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்!!! படித்த திமிர் அனைவர் முகத்திலும் அப்பட்டமாகக் காணப்படுகிறது. இந்த நிலை மாறுமா????

 தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மாவட்ட வாரியாக தேர்தல் சதவீதத்தை வெளியிட்டுள்ளார். தர்மபுரி 85.03 சதவீதத்துடன் முதலிடத்திலும், சென்னை60.99 சதவீதத்தடன் கடைசி இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் 74..26 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாகவும் லக்கானி கூறியுள்ளார்.
லக்கானி வெளியிட்ட விபரம்:
01. திருவள்ளூர்: 71.20 சதவீதம்
02. சென்னை: 60.99 சதவீதம்
03. காஞ்சிபுரம்: 68.77 சதவீதம்
04. வேலூர்: 77.24 சதவீதம்
05. கிருஷ்ணகிரி: 78.38 சதவீதம்
06. தர்மபுரி: 85.03சதவீதம்
07. திருவண்ணாமலை: 82.99 சதவீதம்
08. விழுப்புரம்: 79.44 சதவீதம்
09. சேலம்: 80 சதவீதம்
10. நாமக்கல்: 82.10 சதவீதம்
11. ஈரோடு: 79.39 சதவீதம்
12. நீலகிரி: 70.53 சதவீதம்
13. கோவை: 68.13 சதவீதம்
14. திண்டுக்கல்: 79.62 சதவீதம்
15. கரூர்:83.09 சதவீதம்
16. திருச்சி: 75.77 சதவீதம்
17. பெரம்பலூர்: 79.54 சதவீதம்
18. கடலூர்: 78.64 சதவீதம்
19. நாகை: 76.05 சதவீதம்
20. திருவாரூர்: 78.04 சதவீதம்
21. தஞ்சாவூர்: 77.44 சதவீதம்
22. புதுக்கோட்டை: 77.07 சதவீதம்
23. சிவகங்கை: 69.80 சதவீதம்
24. மதுரை: 71.09 சதவீதம்
25. தேனி: 75. 29 சதவீதம்
26. விருதுநகர்: 66.36 சதவீதம்
27. ராமநாதபுரம்: 67.78 சதவீதம்
28. தூத்துக்குடி: 71.17 சதவீதம்
29. திருநெல்வேலி: 71.94 சதவீதம்
30. கன்னியாகுமரி: 66.32 சதவீதம்
31. அரியலூர்: 83.77 சதவீதம்
32. திருப்பூர்: 72.68 சதவீதம்

சென்னையில் படித்தவர்கள் அதிகம். அனால் அங்குதான் ஓட்டுப் போட்டவர்கள் சதவிகிதம் குறைவு. பொதுவாகவே நகரங்களில் வாக்குப்பதிவு சதவிகிதங்கள் குறைவாகவே இருக்கின்றன. இதன் காரணம் என்ன? படித்தவர்களின் அக்கறையின்மையா?

 http://tamil.thehindu.com/       Dated 17th May 2016 செய்தியைப் பாருங்கள்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பூங்காநகரிலுள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் 133 நரிக்குறவர்கள் நேற்று ஆர்வமுடன் வாக்களித்தனர். இவர்களில் 65 பேர் முதன்முறையாக நேற்று வாக்களித் தனர்……… இங்குள்ள 133 நரிக்குறவர்களிடம் வாக்குக்கு பணம் கொடுக்க கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகள் முயன்றுள்ளன. ஆனால் பணம் வாங்க இங்குள்ள பெரியவர்கள் மறுத்துவிட்டதாக வாக்களித்துவிட்டு திரும்பிய மோகன் (67) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, “வாக்காளர் பட்டியலில் எங்களது பெயரை சேர்த்தபின்னர்தான் அரசியல்வாதிகள் எங்கள் பகுதிக்கு வந்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக எங்கள் இடத்துக்கு அவர்கள் வந்ததே இல்லை. எனவே, ஓட்டுக்கு உள்ள மரியாதையை தெரிந்துகொண்டதால் யாரிடமும் காசு வாங்கவில்லைஎன்று தெரிவித்தார். இது குறித்து பிரமிளா என்பவர் கூறும்போது, “நாங்கள் பாசி, ஊசி, மாலை விற்று பிழைப்பு நடத்துபவர்கள்தான். சில நேரங்களில் பிச்சை எடுத்தும் பிழைக்கிறோம். ஆனால் நாங்கள் ஓட்டுக்கு காசு வாங்கவில்லை. இது சத்தியம். காசு வாங்கினால் எங்களுக்கு அரசியல்வாதிகள் எதையும் செய்து தரமாட்டார்கள். எங்களுக்கு எல்லாவற்றையும் அரசு அதிகாரிகள்தான் இதுவரை செய்து கொடுத்திருக்கிறார்கள்என்றார்.
படிக்காத பாமர மக்களின் விழிப்புணர்வைப்பாருங்கள்!! நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. யார் நமது உண்மையான நம்பிக்கை நட்சத்திரங்கள்??????? உங்கள் சிந்தனைக்கு!!!

570 கோடி ரூபாய் மர்மம்

8 கன்டெய்னர் பணம் எங்கிருந்து வந்தது?


பணத்தை அள்ளிக்கொண்டு போன கண்டெய்னர்கள் 8 ஆனால் பிடிபட்டது 3 மட்டும்தான். 3 லும் 570 கோடிகள் என்பது மிகக் குறைவு. எல்லாக்கட்சியினர், நியாயமான அதிகாரிகள் ,வருமான வரித் துறையினர் முன் வைத்து பணத்தை எண்ணினால் அதிர்ச்சி தரும் வகையில் கோடிகள் எகிறும் என்கிறார்கள் சில வங்கி அதிகாரிகளே?.காரணம் 570 கோடிகளுக்கு ஒரு லாரியே போதும் என்கிறார்கள். திருப்பூரில் 570 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்ட மூன்று கன்டெய்னர்கள் குறித்து அதிர வைக்கும் தகவல்கள் கசிந்துள்ளன. 
'பிடிபட்ட அன்றே எஸ்.பி.ஐ வங்கியின் மூத்த அதிகாரிகள் வெளியூருக்கு தப்பிச் சென்றது ஏன்?' என அதிர வைக்கிறார்கள் வங்கி ஊழியர்கள் சிலர்.

கோவை, ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து மூன்று கன்டெய்னர்களில் எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை, திருப்பூர் வடக்குத் தொகுதி தேர்தல் கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் நிறுத்தி சோதனை செய்தார். அதிகாரிகள் சோதனை செய்ய வந்திருக்கிறார்கள் என்று தெரிந்ததும் மூன்று லாரிகளும் வேகமாகச் சென்றுள்ளன. அந்த வாகனத்தை விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தினர். விசாரணையில், ' ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்பேரில் விஜயவாடாவில் உள்ள ஸ்டேட் வங்கி கிளைக்குப் பணம் கொண்டு செல்லப்படுவதாக'  தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், இதுதொடர்பான ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளிடம் காட்டவில்லை. கன்டெய்னர் லாரியின் எண்ணும், காட்டப்பட்ட ஆவணங்களிலும் பெருமளவு வித்தியாசம் இருந்துள்ளது. அதிலும், ஒரே நேரத்தில் 570 கோடி ரூபாய் பணம் பிடிப்பட்டது, பொது மக்களிடையே கூடுதல் சந்தேகங்களைக் கிளப்பியது. 'இது யாருடைய பணம்எதற்காக மாநிலம்விட்டு மாநிலம் கடத்தப்பட்டதுஅதிலும், தேர்தலுக்கு ஒருநாள் முன்பு இப்படி அவசரம் அவசரமாகக் கொண்டு செல்லப்படுவதன் மர்மம் என்ன
அதிகாரிகளைப் பார்த்ததும் கன்டெய்னரில் வந்தவர்கள் தப்பியோட முயற்சித்தது ஏன்?' என பல கேள்விகளை அரசியல் கட்சிகள் எழுப்பின. நேற்று இதுதொடர்பாக தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ' இவ்வளவு பெரும் தொகை எங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது
570 கோடி ரூபாயை, மூன்று கன்டெய்னரில் கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு உள்ள மிகப் பெருந்தொகையை எந்த ஒரு வங்கியிலாவது வைத்திருக்க முடியுமா
570 கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் செல்ல மூன்று கன்டெய்னர்கள் தேவைப்படுமா
மூன்று கன்டெய்னர்களிலும் இருந்த பணம் முறையாக, அதிகாரம் பெற்ற அலுவலரால் எண்ணப்பட்டதா
ஒரு வங்கியிலே எவ்வளவு பணத்தை ஒரு நேரத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று உச்ச வரம்பு விதி இருக்கிறதா இல்லையா
ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு இவ்வளவு பெரும் தொகையை எடுத்துச் செல்ல என்ன காரணம்
அந்த வண்டியிலே எந்த உரிய ஆவணங்களும் இல்லையே?

ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்ட பணம் என்றால், பறக்கும் படையினர் வண்டியை நிறுத்த முயன்ற போது நிற்காமல் சென்றதற்கு என்ன காரணம்
தவறான வழிகளில் சேர்ந்த பணம் என்பதால் தானே கன்டெய்னர்களை நிறுத்தாமல் கொண்டு சென்றிருக்கிறார்கள். 

வண்டியில் ஏதோ ஜெராக்ஸ் நகல்களை மட்டும் காட்டினார்களாம். 
அந்த நகல்களிலும் முரண்பாடான தகவல்கள் உள்ளனவே. உண்மை நகல்கள் எங்கே
இவ்வளவு பணம் எடுத்துச் சென்றால் அது உண்மையான நேர்மையான நோக்கத்திற்கான பணமாக இருந்தால், இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும்.
அப்படி எந்த இன்சூரன்ஸ் ஆவணங்களும் இல்லையாம். 
ரிசர்வ் வங்கி விதி முறைப்படி ஒரு கோடி ரூபாய் கொண்டு சென்றால், அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பாதுகாப்போடு செல்ல வேண்டுமென்றும், 5 கோடி ரூபாய் கொண்டு சென்றால், அதற்கு எவ்வளவு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதற்கு விதிமுறைகள் உள்ளன. விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. 
இந்தப் பணத்தை பகலில் அல்லாமல் இரவில் எடுத்துச் செல்ல என்ன காரணம்?" எனக் கேள்வி எழுப்பிருந்தார்.
'கன்டெய்னர் மர்மம்' குறித்து வங்கி அதிகாரி ஒருவரிடம் பேசினோம். 
வெளியில் வராத பல விஷயங்களை நம்மிடம் பேசினார் அவர். " இந்த விவகாரத்தில் ஸ்டேட் வங்கி அதிகாரிகள் பலரின் தலை உருளப் போகிறது.
ரிசர்வ் வங்கியின் பெயரைப் பயன்படுத்தி தவறு செய்திருக்கிறார்கள். 
கன்டெய்னரில் பணத்தை அனுப்பிய கையோடு, ஸ்டேட் வங்கி கிளையின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் வெளியூருக்குச் சென்றுவிட்டார்கள். '
 வருமான வரித்துறை வங்கியில் தீவிர விசாரணை நடத்த முயற்சிக்கிறது' எனக் கிடைத்த தகவலின்பேரில், கண்டெய்னர் மூலம் ஆந்திராவுக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.

இதற்கு ஆந்திராவைச் சேர்ந்தவரும், தமிழகத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நபர் ஒருவர்தான் உதவியிருக்கிறார். 'பதவியைத் தக்க வைத்ததற்கான கைமாறு' என ஒரே வரியில் சொல்லிவிடலாம். 
கன்டெய்னர் பணத்தோடு சூரி ரெட்டி என்பவர் சென்றதாகச் சொல்கிறார்கள். அவர் ஒரு சாதாரண ஊழியர். இவ்வளவு பெரிய தொகைக்கு அவர் ஒருவர் மட்டும்தான் பொறுப்பாளி. இதைவிட, இந்தப் பணம் வங்கிக்குச் சொந்தமானது அல்ல என்பதற்கு வேறு காரணம் தேவையில்லை. தேர்தல் முடிந்த பிறகு பணத்தைக் கொண்டு போயிருக்கலாம். 
வருமான வரித்துறை இந்தப் பணத்தை மோப்பம் பிடித்துவிட்டதுதான், அவசரமாகக் கடத்தி செல்லப்படுவதற்குக் காரணம்" என்றார் விரிவாக.

சில சந்தேகங்கள்: 

1.
கோவை வங்கிகளின் வரலாற்றிலேயே இவ்வளவு பணத்தை இதுவரையில் கொண்டு சென்றதில்லை. 570 கோடியை சேமித்து வைக்கும் அளவுக்கான வசதிகள் ஸ்டேட் வங்கியில் இல்லை என்பது உண்மையா? இல்லையா?

2.
பணம் அனைத்தும் மரப் பெட்டிகளில் ஏதோ பிஸ்கட் பாக்கெட்டுகளை பேக்கிங் செய்வதுபோல், அடுக்கியிருந்தது சரியா?

3.
வங்கிகளின் அதிகாரப்பூர்வ ஆவணம் இல்லாமல், லுங்கி உடையில் காவல்துறையினர் சென்றது ஏன்?

4.
பணம் பிடிபட்டு 18 மணிநேரம் கழித்து வங்கி அதிகாரிகள் உரிமை கொண்டாடியது ஏன்?

5.
கன்டெய்னர் வண்டிகளுக்கு சாதாரண பூட்டைப் போட்டு பூட்டியது சரியா?

6.
கன்டெய்னர்களுக்கு ஏன் சீல் வைக்கப்படவில்லை?  
7.பணம் பறிமுதலான அன்றே எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள் வெளியூருக்குத் தப்பிச் சென்றது ஏன்?

8.
முக்கிய அரசியல் புள்ளியின் பணத்தை ஐதராபாத்துக்கு கொண்டு செல்ல முயற்சி நடந்ததா?

9.
தமிழகத்தைச் சேர்ந்த மூத்த முக்கியப் புள்ளியின் அழுத்தத்தைத் தொடர்ந்தும் அவருக்கு ஆதரவாக மத்திய ஜெட் வேக அமைச்சர் கட்டாய வற்புறுத்தல் அறிவுறுத்தலின் பேரிலும்தான்  வங்கி அதிகாரிகள் வேறு  வழியின்றி பணத்திற்கு உரிமை கோரினார்கள் என்ற தகவல் உண்மையா?

-
என அணிவகுக்கும் சந்தேகங்களை நம்மிடம் பட்டியலிட்டார் இந்தியன் வங்கி அதிகாரி ஒருவர். மேலும் அவர், " கோவை வங்கிகளின் வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய தொகையை நாங்கள் அனுப்பியதில்லை. 
மூன்று கண்டெய்னர் பணத்தையும் சேர்த்து 570 கோடி ரூபாய் என்பதை நம்ப முடியவில்லை. பணத்தின் மதிப்பு கூடுதலாக இருக்கவே வாய்ப்பு அதிகம். 
ஏற்கெனவே, ஐந்து கண்டெய்னர்கள் ஆந்திர போலீஸ் பாதுகாப்புடன் சென்று சேர வேண்டிய இடத்திற்குப் போய்விட்டது என்கிறார்கள். 
கடைசி நிமிடத்தில் இருக்கும் மீதிப் பணத்தையும் கடத்த முயற்சித்து மாட்டிக் கொண்டார்கள். ரிசர்வ் வங்கி ஆளுநர் நேரடியாக விசாரணை நடத்தினால், யாருடைய ஊழல் பணம்
எதற்காக ஆந்திரா சென்றதுகடைசி நிமிடத்தில் மாநிலம் விட்டு மாநிலம் கடத்த முயற்சித்தது ஏன்?  என்பதற்கான முழு ரகசியங்களும் அம்பலமாகும்" என்கிறார்.

அரசின் பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வரும், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிடுவாராஎனக் கேள்வி எழுப்புகின்றன அரசியல் கட்சிகள். 
தேர்தல் தொடங்கிய நாளில் இருந்தே கொங்கு மண்டலத்தை குறிவைத்தே வருமான வரித்துறையினர் படையெடுத்தனர்.
 'பெரும் பணம் சிக்கிவிடக் கூடாது' என்ற அச்சத்தில் கடைசி நிமிடத்தில் கண்டெய்னரில் கடத்த உத்தரவிட்டது யார்
என்ற மில்லியன் டாலர் கேள்விக்கான முடிச்சை ரிசர்வ் வங்கி அவிழ்க்குமா
இக் கேள்விகளுக்கு கண்டிப்பாக பதில்கள் தேவை ?
பதில் தருவது யார் ?

 1. திருப்பூர் அருகே, 570 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்ட லாரிகள், டீசல் போடுவதற்காக, சர்வீஸ் சாலையில் சென்று கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோவையில் இருந்து, அவை பிடிபட்ட இடம் வரை, 15 பெட்ரோல் பங்க்குகள் இருந்தன. அவற்றில் டீசல் நிரப்பாதது ஏன்
2. மேலும், பிடிபட்ட போது, மூன்று லாரிகளிலும் டேங்க் முழுவதும் டீசல் இருந்தது. பெருமாநல்லுார் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பப்பட்டது தெரிய வந்துள்ளது. இதற்கான பதில் என்ன?

3.
மூன்று லாரிகளும், தேர்தல் அதிகாரிகளால், 7 கி.மீ., துாரம் துரத்தி செல்லப்பட்ட போது, மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சென்றுள்ளதாக தெரிகிறது. இது சாதாரண வேகம் தான், மேலும் சர்வீஸ் சாலையில் இதற்கு மேல் வேகமாக செல்ல முடியாது, அப்படி இருக்கையில் தேர்தல் அதிகாரிகளால் ஏன் உடனடியாக அவற்றை நிறுத்த
முடியவில்லை?

4. மூன்று லாரிகளிலும் மொத்தம், 195 மரப்பெட்டிகளில் பணம் இருந்தது. முதல் லாரியில் - 60, இரண்டாவது லாரியில் - 65, மூன்றாவது லாரியில் - 70. விதிமுறைகளின்படி, ஸ்டீல் பெட்டிகளில் தான் பணம் எடுத்துச்செல்லப்பட வேண்டும். இதற்கு தீ விபத்து அபாயமும் ஒரு காரணம். இதை கருதி, தீயணைப்பு கருவியும் வாகனத்தில் இருக்க வேண்டும். ஆனால், மரப்பெட்டியும், தீயணைப்பு கருவி இல்லாததும் சந்தேகத்தை கிளப்புகின்றன.

5. பிடிப்பட்ட லாரிகளின் பதிவு எண்கள் - ஏபி 13 எக்ஸ் 8650, ஏபி 13 எக்ஸ் 8204, ஏபி 13 எக்ஸ் 5203. இதில், ஏபி 13 எக்ஸ் 5203 என்ற பதிவு எண் தான் ஆவணங்களில் மாறி உள்ளது. ஆவணங்களில் உள்ள பதிவு எண் என்ன என்பதை அதிகாரிகள் தெரிவிக்க மறுப்பது ஏன்?

6. மூன்று லாரிகள் மற்றும், மூன்று இன்னோவா கார்கள் பிடிப்பட்டன. மூன்று லாரிகள் பற்றிய தகவல்கள் தான் வெளி வருகின்றன. மூன்று இன்னோவா கார்களில், இரண்டு மட்டும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. மூன்றாவது எங்கே?
மூன்றாவது காரை எடுத்துச் சென்ற, வங்கி ஊழியர் சூரி ரெட்டி என்பவர் இதுவரை சம்பவ இடத்திற்கு வரவில்லை. வேறு அதிகாரிகள் தான் வந்து செல்கின்றனர். சூரிரெட்டி உண்மையிலேயே வங்கி ஊழியரா? சூரிரெட்டியை அதிகாரிகள் தேடாதது ஏன்? இந்த, இரண்டு வண்டிகள் யாருக்கு சொந்தமானவை? அதிகாரிகள் அவை பற்றி தகவல் வெளியிட மறுப்பது ஏன்? மூன்றாவது வண்டியை அதிகாரிகள் தேடாதது ஏன்?

7. கோவை போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதா?

8. தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே அனுமதி பெறாதது ஏன்?

9. விசாகப்பட்டினம் வங்கி கிளைக்கு, சென்னையில் இருந்து தான் பணத்தை எடுத்து செல்வது எளிது. கோவையில் இருந்து எடுத்து செல்ல முயற்சித்தது ஏன்?

10. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையமும், ரிசர்வ் வங்கியும் நேரிடையாக எந்த பதிலும் கூறாமல், வருமான வரி அதிகாரிகளை கை காட்டுவது ஏன்?
11.
இந்த விஷயத்தில் மத்திய அமைச்சர் தலையிட்டார் என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டி உள்ளார். யார் அந்த மத்திய அமைச்சர்?

12. இந்த பணம், ஸ்டேட் வங்கிக்கு உரியது என்றாலும், அதற்கான உரிமையை கோர, 18 மணி நேரம் ஆனது ஏன் என்ற கேள்விக்கு, சனிக்கிழமை இரவு பணம் பிடிப்பட்டது. அடுத்த நாள் ஞாயிற்று கிழமை. விடுமுறை தினம் என்பதால், அரசு வங்கி அதிகாரிகளிடம் தாமதம் ஏற்பட்டது என்று காரணம் கூறப்படுகிறது. இவ்வளவு பணம் பிடிபட்டும் விடுமுறையை காரணம் காட்டுவது சரியா? அப்படியானால் விடுமுறையை ஒட்டி பணத்தை எடுத்துச் சென்றதற்கான காரணம் என்ன?

13. விசாகப்பட்டினத்தில், 77 ஸ்டேட் வங்கி கிளைகள் உள்ளன. 2,500 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இவற்றில் பணம் வைக்க, நாள் ஒன்றுக்கு, 40 கோடி ரூபாய் தேவை என்று, விசாகப்பட்டினம் எஸ்.பி.ஐ., வங்கி கிளை மேலாளர் பூர்ண சந்திர ராவ் கூறுகிறார். வங்கி கிளைக்கு, ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை தெரிந்து வைத்து இருக்கும் அவர், மார்ச் மாதமே கோவை வங்கி கிளையிடம் பணம் கேட்டதாக கூறுகிறார். ஆனால், அதை எடுத்துச் செல்வதற்கு ஏன் இவ்வளவு தாமதம்?

14. இதற்கு முன் இது போல், பெரிய தொகை கொண்டு செல்லப்பட்டதற்கு உதாரணம் உண்டா என்ற கேள்விக்கு, விசாகப்பட்டினம் எஸ்.பி.ஐ., வங்கி கிளை மேலாளர் பூர்ண சந்திர ராவ் கூறுகையில், ''கடந்த செப்டம்பரில், மைசூரில் உள்ள ரிசர்வ் வங்கியின் கரன்சி வினியோக மையத்தில் இருந்து, 1,116 கோடி ரூபாயை இங்கு கொண்டு வந்தோம்,'' என, பதில் கூறியுள்ளார். ஆனால், ''மாநிலம் விட்டு மாநிலத்துக்கு ரொக்கம் கொண்டு செல்லும் வழக்கம் இல்லை. ஒரு மாநிலத்தில் உள்ள வங்கி கிளைக்கு பணம் தேவை என்றால், அருகில் உள்ள அதே வங்கியின் கிளையை நாடலாம் அல்லது அந்தப் பகுதியில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையை நாடலாம்; இது தான் நடைமுறை,'' என்று ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
15.
இந்தியாவில் பண நிர்வாகத்தின் பொறுப்பு ரிசர்வ் வங்கி உடையது. நாட்டில் எந்த இடத்திலும் பண தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க; 18 இடங்களில் நோட்டு அச்சகங்கள் மற்றும் நாணய உற்பத்தி மையங்கள்
ஒரு கிளை அலுவலகம்
நேரடி நிர்வாகத்தில், கொச்சியில், ஒரு பண காப்பகம்
வங்கிகளின் நிர்வாகத்தில், 4,211 பண காப்பகங்கள் என, ஒரு மாபெரும் பண நிர்வாக கட்டமைப்பை ரிசர்வ் வங்கி நடத்தி வருகிறது. இதில், வங்கிகளிடம் உள்ள பண காப்பகங்கள், அந்தந்த வங்கியின் செயல்பாட்டிற்கு மிக முக்கியமானது. வங்கிகளே பண காப்பகங்களை நடத்துவதன் மூலம், தங்கள் பண தேவைகளுக்கு, ஒவ்வொரு முறையும் ரிசர்வ் வங்கியை அணுக வேண்டியதில்லை.
தனியார் வங்கிகளுக்கு பண காப்பங்களை நடத்தும் உரிமை முதலில், 1994ல் தான் கொடுக்கப்பட்டது. இதை பெற்ற வங்கி எச்.டி.எப்.சி.,
என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காப்பகங்களில் நடக்கும் பண பரிவர்த்தனைகள் பற்றி, ரிசர்வ் வங்கிக்கு தகவல் தெரிவிப்பது அவசியம். அப்படி தெரிவிக்காவிட்டால் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இதுபற்றி, ரிசர்வ் வங்கி, 2014ல் வெளியிட்ட சுற்றறிக்கையில், 'பண காப்பகங்கள், ஒவ்வொரு நாளும் நடக்கும் அனைத்து பரிவர்த்தனைகள் பற்றியும், அன்றிரவு, 9:00 மணிக்குள், 'ஐகாம்ஸ்' மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அன்று பண காப்பகத்தில் இருந்த தொகையின் மீது அபராத வட்டி வசூலிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிலை இப்படி இருக்க, எஸ்.பி.ஐ., ஒரு பண காப்பகத்தில் இருந்து மற்றொன்றுக்கு பணத்தை மாற்றியது பற்றி ரிசர்வ் வங்கிக்கு தகவல் வரவில்லை என்று, ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு பிராந்திய இயக்குனர் சதக்கத்துல்லா ஞாயிறன்று காலை கூறினார். தகவல் தெரிவிக்காததற்கு காரணம் என்ன?

16. விசாகப்பட்டினம் வங்கி கிளை மேலாளர் பூர்ண சந்திர ராவ், மூன்று கன்டெய்னர் லாரிகளுடன், மூன்று ஜீப்களில் போலீசாரை பாதுகாப்புக்கு அனுப்பியதாக கூறுகிறார். ஆனால், திருப்பூரில், மூன்று இன்னோவா கார்கள் பிடிப்பட்டுள்ளன. ஜீப் என்பது இன்னோவா காராக மாறியது எப்படி?

17. இப்பிரச்னை குறித்து தனியார் வங்கிகள் கூறுவது என்ன? அவை, என்ன மாதிரியான நடைமுறைகளை பின்பற்றுகின்றன? இது குறித்து தனியார் வங்கியின் நிர்வாக இயக்குனர் ஒருவர் கூறியதாவது:
ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான, 570 கோடி ரூபாய் சிக்கியிருப்பது பற்றி அறிந்தேன். இதேபோல், எங்கள் வங்கிக்கு சொந்தமான, ஐந்து கோடி ரூபாய், கடந்த சட்டசபை தேர்தலின் போது வழி மறிக்கப்பட்டது; நாங்கள் அதை பின்னர் மீட்டோம். அதுமட்டுமின்றி, கர்நாடகாவில் இருந்து, ஆந்திராவுக்கு பல கோடி ரூபாயை கொண்டு சென்ற போது, அங்கும் தேர்தல் அதிகாரிகள் முடக்கினர். வேறு மாநிலம் என்பதால், அதை மீட்டு வருவதற்கு, மூன்று நாட்களுக்கு மேல் ஆனது.
இதுபோன்ற நேரங்களில், மின்னஞ்சல் பரிவர்த்தனை, பணம்
அனுப்பியதற்கான, 'வவுச்சர்' மற்றும், இன்சூரன்ஸ் செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். எவ்வளவு பணம் கொண்டு செல்கிறோம் என்பதற்கு கட்டுப்பாடு இல்லை. எனினும், வழியில் உள்ள ஒவ்வொரு கரன்சி மையத்திலும் நின்று போகவேண்டும்.
எங்கள் கரன்சி வினியோக மையத்தில் அதிகபட்சமாக, 250 கோடி ரூபாய் வரை வைத்திருக்க அனுமதி உள்ளது. அதற்கு மேல், ஒரு மையத்தில் இருந்தால், அதை வேறு மையத்திற்கு மாற்றி விடுவோம். இவ்வாறு, மாற்றும் போது தான் ஸ்டேட் வங்கியின் பணம் சிக்கியிருக்கக்கூடும். வார விடுமுறை நாளில் பணம் சிக்கியதும், அது அரசு வங்கி என்பதாலும், அது தொடர்பாக யார் உடனடியாக உரிமை கோருவது என்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். பணம் எடுத்துச் செல்லும் முன், உள்ளூர் போலீசிடம் நாங்கள் சொல்லிவிட்டு புறப்படுவோம். பொதுவாக, வங்கிகள் இவ்வாறாக பணம் அனுப்புவதை வெளியில் சொல்ல விரும்பமாட்டார்கள். அது சில நேரங்களில், வேறுவித சிக்கலுக்கு வழிவகுக்கிறது. எங்கள் பணத்தை அனுப்பும் போது, எங்கள் வாகனம் என்பதை வெளியில் இருந்து பார்த்து அறிய முடியாது. பதிவுச்சான்றை பார்த்தால் தான், அது எங்களுக்கு சொந்தமான வாகனம் என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த நடைமுறையை, எஸ்.பி.ஐ., பின்பற்றாததற்கு காரணம் என்ன?

18. ஒரு வங்கி கிளையில் இருந்து மற்றொரு வங்கி கிளைக்கு அதிகபட்சம், ஐந்து கோடி ரூபாய் தான் கொண்டு செல்ல முடியும் என்று கூறப்படும் நிலையில், 570 கோடி ரூபாயை, ஒரே நேரத்தில் கொண்டு சென்றதற்கான காரணம் என்ன?

19. ஒவ்வொரு கிளையும், அதன் வைப்புத் தொகைக்கு ஏற்ப, 4.5 சதவீத ரொக்கத்தை வைத்துக் கொள்ளலாம். அதற்கு அதிகமான ரொக்கத்தை, ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகள் நிர்வகிக்கும், 'செஸ்ட்' என, அழைக்கப்படும் பண காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும். 4.5 சதவீதத்துக்கு கீழ் ரொக்கம் குறையும் போது, இந்த பண காப்பகத்தில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த நடைமுறையில் இப்படிப்பட்ட பண பரிவர்த்தனையின் நிலை என்ன?

20. கோவை ஸ்டேட் வங்கியிலிருந்து, 570 கோடி ரூபாய் ரொக்கத்தை, ஆந்திர மாநிலம் கொண்டு செல்ல விதிகள் அனுமதிக்கிறதா?
கோவையிலிருந்து இவ்வளவு அதிகமான ரொக்கம், ஆந்திராவிற்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. விசாகப்பட்டினம் ஸ்டேட் வங்கி கிளைக்கு ரொக்கம் தேவைப்பட்டால், அந்த மாநிலத்தில் உள்ள, அந்த வங்கியின் பண காப்பத்தை தான் நாட வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைப்படி, கோவையில் சேமிக்கப்பட்ட, 570 கோடி ரூபாய் ரொக்கத்தை, சென்னை ரிசர்வ் வங்கியின் பண பாதுகாப்பு மையத்துக்குத் தான் கொண்டு சென்றிருக்க வேண்டும். விசாகப்பட்டினத்திற்கு கொண்டு சென்றது விதிகளுக்கு புறம்பானது. வழக்கத்திலும் இதுபோன்ற நடைமுறை இல்லை.

21. ஸ்டேட் வங்கிக்கு தமிழகத்தில், 144 பண காப்பகங்கள் உள்ளன. ஆந்திர எல்லையை ஒட்டி திருத்தணியில் இருந்து சென்னை வரை வசதியான இடங்களில் இவை உள்ளன. அப்படி இருக்கையில், கோவையில் இருந்து குறிப்பாக பணம் எடுத்துச் செல்லப்
பட்டது எதற்காக?
22.
வங்கியின் பணத்தை கொண்டு செல்லும் லாரி, வழியில் எங்காவது நிறுத்தப்பட்டால், நிறுத்தப்பட்ட, 15 நிமிடத்திற்குள் வங்கியின் தகுந்த அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அந்த அதிகாரி, 'டிபாசிட் இன்சூரன்ஸ் அண்ட் கிரெடிட் கேரன்டி கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்திற்கு, உடனடியாக தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிட்டால், அந்தப் பணம் வங்கியுடையது அல்ல என்று கருதப்படும் என்பது விதி. 
இந்த நடைமுறையைப் பின்பற்றாமல், 18 மணி நேரம், தாமதம் செய்தது ஏன்
 நன்றி:http://suransukumaran.blogspot.in/